பெண் தீக்குளித்து தற்கொலை.

by Staff / 02-11-2023 04:18:04pm
 பெண் தீக்குளித்து தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கீழ விளாங்காடு பகுதியை சேர்ந்தவர் உமா. இவரது மனைவி அவ்வையார் (வயது 49). அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன்பிறகு அவ்வையார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை உமா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவ்வையார் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவ்வையார் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக இறந்தார். வெளியே சென்று வீடு திரும்பிய உமா, மனைவி தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவ்வையார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories