வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ் - நோயாளி மரணம்

by Staff / 02-11-2023 04:15:02pm
வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ் - நோயாளி மரணம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 74 வயது நோயாளி இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில்,
அதில் பயணித்த 7 பேர் உயிர்தப்பினர். கடும் தீ பரவியதை அடுத்து நோயாளி மட்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உ யிரிழந்தார். மற்ற அனைவரும் அங்கிருந்து ஓடி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo