விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் - சீமான்

by Staff / 02-11-2023 04:07:30pm
விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் - சீமான்

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததுதான் விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நடிகர் விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார் என்று தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார். விஜய் நீங்கள் நினைப்பது போல் இல்லை. விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் வீழ்ச்சியை சந்தித்தார். எதிர்காலத்தில் நான் யாரோடும் கூட்டணி இல்லை' என்றார்.

 

Tags :

Share via