தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று பணியில் இருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி

by Admin / 20-03-2026 12:16:47am
 தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று பணியில் இருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி

சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று பணியில் இருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுப்படி போக்குவரத்து கழக ஊழியர்கள். போக்குவரத்து காவலர்கள் .சுகாதாரத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் .தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை பணியில் இருப்போர்,சிறைத்துறை பணியாளர்கள், ரயில்வே, மெட்ரோ ரயில் மற்றும் விமான போக்குவரத்து ஊழியர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் இந்த துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வராத வாக்காளர்கள் பிரிவின் தபால் வாக்குகளை அளிக்கலாம் என்றும் தகுதி உள்ள பணியாளர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள் படிவம் 12 டி சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்தந்த துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள  நோடல்அலுவலர்கள் மூலம் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இதற்காக அமைக்கப்படும் பிரத்யோக தபால் வாக்கு மையங்களில் ரகசியம் காக்கப்படும் வகையில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி இந்த தேர்தலில் நீட்டிக்கப்பட்டுள்ளது .பதிவு செய்யப்பட்ட அனைத்து தபால் வாக்குகளும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4  அன்று காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories