ராகுல் காந்த்-க்கு உதவுவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி,

by Editor / 27-07-2023 09:15:09pm
ராகுல் காந்த்-க்கு உதவுவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி,

கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலின் பொதுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவர்  ராகுல் காந்த்-க்கு உதவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி,
மாணவர் ராகுல் காந்த்தின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது,அவரை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய நீட் எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்;
அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது; படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து; நிலையான புகழ்; தடைகளைக் கடந்து படிப்போம்; படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via