எல்லோரா

by Admin / 25-01-2022 01:34:24am
எல்லோரா

எல்லோரா
ஔரங்காபாத்திலிருந்து 18 மைல் தொலைவில் எல்லோரா உள்ளது.இந்த வழியானது தெளலதாபாத்
கோட்டையை ஒட்டியே உள்ளது.இந்த எல்லோரா கோவில்கள் மூன்று மதத்தைசேர்ந்தவையாகும்.
இந்து மதம்,புத்த மதம்,சமணமதம்.இங்கு ஏராளமான தெய்வங்களின் கல்வெட்டுகள் உள்ளன.இந்த
மூன்று மதத்தினரின் பெருமையை விளக்கும்.ஒவ்வொரு மதமும் தன்னுடைய உரிய வழியிலேயே இந்த
கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன.இந்த மலையில் கல்வெட்டுகள் இரண்டு கி.மி தூரத்திற்கு தென்
படுகிறது. ஒன்று  முதல்  பன்னிரண்டு வரை உள்ள குகை புத்த மதத்தை விவரிக்கின்றன.மீதம் உள்ள
பதினாறு  இந்து மதத்தை சிறப்பிக்கின்றன.முப்பது முதல் முப்பத்து நான்கு வரை சமண மதத்தை போற்றுகின்றன.புத்த குகைகள்தாம் மிகவும்
பழமை வாய்ந்தவை
குகை எண் பதினாறு இந்து முறை குகைகள் என்று அழைக்கப்படும்.இதை பார்க்க நடந்தே செல்ல வேண்டும்.மீதமுள்ள
குகைகளை பார்க்க மலையின் மறு புறம் செல்ல வேண்டும்.மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டியவை
குகை-5,10,15,16,21,29, மற்றும்.32
குகை-1
இது எல்லோராவில் உள்ள மிகவும் பழமையான குகையாகும்.இதில் முழுமையான ஒரூ பிரகாரம் உள்ளது.
குகை-2 இது ஒரு வெட்ட வெளியாக தென்படுகிறது.இதில் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.அவை கூரையை
தாங்குகின்றன.சிங்க சிம்மாசனம்ஒன்று பத்தர் சிலையை தாங்கி கொள்கிறது.இது அரசரின் சாயலாக உள்ளது.
ஏனைய உருவங்கள் புத்தர் தாமரை மலரில் வீற்றியிருப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

 

எல்லோரா
 

Tags :

Share via