குற்றாலம் சாரல் திருவிழா - 2024 செல்லப்பிராணிகள் கண்காட்சி 

by Editor / 18-08-2024 12:04:54am
குற்றாலம் சாரல் திருவிழா - 2024 செல்லப்பிராணிகள் கண்காட்சி 

குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவினை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் செல்லப்பிராணிகள் கண்காட்சி தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.  கமல் கிஷோர்  அறிவுரைப்படி சிறப்பாக நடைபெற்றது.

செல்லப்பிராணிகள் கண்காட்சி பணிகளை தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஷ்வரி தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்
செங்கோட்டை உதவி இயக்குனர் மருத்துவர் தங்கராஜ் மற்றும் 1962 கால்நடை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மருத்துவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நடுவர்களாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் மருத்துவர் கணேசன் மற்றும் மருத்துவர் கருத்ததுரை ஆகியோர் செயல்பட்டார்கள்.
கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களைச் சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடர், புல்லி குட்டா, மின்பின், பொமரேனியன், டேஷண்ட், கிரே கவுண்ட்டு, ராட்வீலர், டாபர்மேன், டால்மேசன், லசாப்சோ உட்பட 25 வகையான 186  செல்லப்பிராணி  கலந்து கொண்டன.
கண்காட்சியின்  இறுதியில் ஒவ்வொரு இன   செல்லப்பிராணிகளில்   சிறந்த செல்லப்பிராணிக்கு முதல் பரிசும், பங்கு பெற்ற அனைத்து செல்லப்பிராணி களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

 மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் நாட்டின நாய்களில் ஐயப்பன்  என்பவருடைய கன்னி  செல்லப்பிராணிக்கும், அயல் நாட்டின செல்லப்பிராணிகளில் அசோக்குமார்  என்பவருடைய லேப்ரடார் இன  செல்லப்பிராணி க்கும் சிறப்பு பரிசுகள் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது

 

Tags :

Share via