குற்றால சாரல் திருவிழா படகு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

by Editor / 17-08-2024 11:58:51pm
குற்றால சாரல் திருவிழா படகு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் இந்த ஆண்டு சாரல் திருவிழா 16 ஆம் தேதி தொடங்கியது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் ஐந்திரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி வைத்தார் அதன் பின்னர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சேமிப்பு விழாவில் தொடங்கி வைத்தார் இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் சாரல் திருவிழா காலை படகு கிளம்பி படகு போட்டி நடைபெற உள்ளது இந்த படகு போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளனர் இந்த படகு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார் பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசை இசக்கியம்மாள் என்பவர் தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசு தங்கம் என்பவரும் மூன்றாவது பரிசை பானுமதி என்பவரும் தட்டி சென்றனர். ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை வினோத் குமார்,  2ஆம் பரிசு அருண்குமார்,இசக்கிராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தென்காசி கோட்டாட்சிய தலைவர் லாவண்யா போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்.

 

Tags :

Share via