ஆழியாறு கவியருவி 4 மாதங்களுக்குப்பின்னர் இன்று திறப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கவி அருவி. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை பராமரிப்பில் உள்ள கவி அருவிக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கவியரவையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.
தற்போது அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.இன்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
Tags :