காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான கையெழுத்தை இட்டு இங்கு வந்திருகிறேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Admin / 27-07-2022 12:08:51pm
 காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான கையெழுத்தை இட்டு இங்கு வந்திருகிறேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்   நடைபெற்ற  பள்ளி மாணவர்களுக்கான  மனநலம், உடல் நலம்  சார்ந்த விழிப்புணர்வு  தொடக்க விழாவில், மாணவர்கள்  காலையில்  உணவு உண்ணாமல்  வருவதை அறிந்து  காலைச்  சிற்றுண்டித் திட்டத்திற்கான கையெழுத்தை  இட்டு இங்கு வந்திருகிறேன்.  நீதிக்கட்சி முன்னோடி தியாகராயர் தான்  ஆயிரம்  விளக்குத் தொகுதியில்  முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.  அதற்குப்பிறகு  பெருந்தலைவர் காமராசர்,கலைஞர் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால்  பல்வேறு  மாற்றங்களோடு  பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் இன்று உள்ளது .அந்த வகையில் தான் இப்பொழுது நமது அரசு காலைச்சிற்றுண்டித்திட்டத்தை கொண்டு வருகிறது .மாணவர்கள்  நம்பிக்கையுடன்  இருந்தால்  படிப்பு  தானாக வரும் என்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளி  மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

 

Tags :

Share via

More stories