இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல் உருக்கம்

by Editor / 14-07-2025 02:03:22pm
இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல் உருக்கம்

நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். "என்னைப் பார்க்கும் இடமெல்லாம் என் எந்த வயதிலும், கன்னம் கிள்ளும் விரலோடு, 'செல்ல மகனே' என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர் மறைந்துவிட்டார். 'பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்" என்றார்.
 

 

Tags :

Share via