தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்த அதிமுக

by Staff / 31-03-2023 05:32:17pm
தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்த அதிமுக

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தேர்வு செய்யப்பட்டதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியுள்ளது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via