மன்னிப்பு கேட்க முடியாது - கமல்ஹாசன் மறுப்பு

தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது என கமல் தெரிவித்துள்ளார். கன்னட மொழி சர்ச்சை தொடர்பாக கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு கமல் கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் தான் படம் வெளியாகும் என்றால் பட வெளியீட்டை நிறுத்திவைப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Tags :