ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகள் 630 தீவிராதிகள் சுட்டுக்கொலை: மத்திய அரசு

by Admin / 05-08-2021 01:42:55pm
ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகள் 630 தீவிராதிகள் சுட்டுக்கொலை: மத்திய அரசு



2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு காஷ்மீரில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் 2018 முதல் 2021 ஜூன் மாதம் வரை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டர் எண்ணிக்கை எவ்வளவு ? மற்றும் நடைபெற்ற தாக்குதலின் போது வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை ? மற்றும் தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு ?என எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய், தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையை வலுப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமயமாக்கால், தீவிரவாதிகளுக்கு எதிராக உள்ள சட்டங்களை கடுமையாக்குதல் மற்றும் தீவிரவாத தடுப்பு, தேடுதல் வேட்டையை அதிகரிக்க பல்வேறு நடவைடிகைளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நபர்களை இந்திய பாதுகாப்பு படை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும், கடந்த 2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு & காஷ்மீரில் 400 முறை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே சண்டை நடைபெற்றுள்ளது.
 
இந்த சண்டையின்போது 85 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், எதிர் தாக்குதலில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via