போன் ஒட்டு கேட்பு விவகாரம்... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...

by Admin / 05-08-2021 01:44:21pm
போன் ஒட்டு கேட்பு விவகாரம்... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...



போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளன.
 
பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக சிறப்புவிசாரணைக் குழுவை நியமித்து, உச்சநீதிமன்ற கண்காணிப்பில்
 
விசாரணை நடத்தக் கோரி, எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தவிர மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்பது மனுக்களை, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்றுவிசாரிக்க உள்ளது.

 

Tags :

Share via