.தமிழகத்தில் 5 ஆண்டுகளில் தீ விபத்தில் ரூ.2 ஆயிரத்து 425 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு.
தமிழகத்தில் கடந்த 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 930 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் ரூ.211 கோடியே 4 லட்சம் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. ரூ.2 ஆயிரத்து 425 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த 5 ஆண்டுகளில் தீ விபத்தில் சிக்கி 386 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 611 பேரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags : .தமிழகத்தில் 5 ஆண்டுகளில் தீ விபத்தில் ரூ.2 ஆயிரத்து 425 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு.



















