சாலை விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலி

by Editor / 17-09-2025 02:41:06pm
சாலை விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நெடுஞ்சாலையில் இன்று (செப் 17) காலை கார் மீது டிப்பர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில், காரில் இருந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கார் தவறான பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் முழு விவரம் குறித்த தகவல் தெரியவில்லை.

 

Tags :

Share via