6-ம் வகுப்பு மாணவியிடம் பேசிய முதல்வர்

by Editor / 15-10-2021 04:31:43pm
 6-ம் வகுப்பு மாணவியிடம் பேசிய முதல்வர்

 

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து  பள்ளிகளை திறக்கக்கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரைச் சேர்ந்த ரவிராஜன் – உதயகுமாரி ஆகியோரின் மகளான பிரஜ்னா என்ற 6ம் வகுப்பு மாணவி முதல்வருக்கு  கடிதம் எழுதினார். வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் உடனே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வைக்கு இந்தக் கடிதம் வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, நவம்பர் 1-ம் தேதி நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போன் அப்படி பள்ளிகள் திறக்கும் போது நீங்களும் பள்ளிக்கு போகலாம். பள்ளிக்கு செல்லும் போது நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பாக தனிமனித இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். ஆசிரியர் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமியிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து முதல்வரிடம் பேசிய மாணவியின் பெற்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர

 

Tags :

Share via