ஈரானின் உச்ச தலைவர் அயத் தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதாக 

by Admin / 04-03-2026 09:51:30am
ஈரானின் உச்ச தலைவர் அயத் தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதாக 

ஈரானின் உச்ச தலைவர் அயத் தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதாக  சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 56 வயதான மொஜ்தபா கமேனி ஈரானின் அதிகார மையத்தில் நீண்ட காலமாக திரை மறைவில் செல்வாக்கு செலுத்தி வருபவர். சமீபத்திய காலங்களில் அயத்தொல்லா என்ற உயர்ந்த மதக்குரு நிலைக்கு உயர்த்தப்பட்டார் . இது அவர் உச்ச தலைவர் பதவிக்கு வருவதற்கான ஒரு தகுதியாக கருதப்படுகிறது. ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை மற்றும் உளவுத்துறையுடன் இவர் மிக நெருக்கமான உறவை கொண்டுள்ளார் .ஈரான்- ஈராக் போரில் பங்கேற்ற அனுபவம் இவருக்கு உண்டு. சனிக்கிழமை அன்று இஸ்ரேல் அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில்  கமேனி கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி புதிய தலைவராக பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. ஈரானின் அரசியலமைப்பு படி உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நிபுணர்கள் சபைக்கு உள்ளது. வாரிசு அடிப்படையில் பதவி வழங்குவது ஈரானின் புரட்சிகர கொள்கைகளுக்கு எதிரானது என்ற விமர்சனமும் ஒருபுறம் முன் வைக்கப்படுகிறது.

 

Tags :

Share via