அய்யாத்துரை பாண்டியன் நீக்கம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா.

by Editor / 08-04-2022 07:29:55pm
அய்யாத்துரை பாண்டியன் நீக்கம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா.

தென்காசி அமமுக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அய்யாதுரை பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:
தான் அமமுக கட்சியில் இணைந்த நாள் முதல் கட்சிக்காக தன் சொந்த பணத்தில் இருந்து தான் சட்டமன்றத்தேர்தல்,ஊரக உள்ளாட்சித்தேர்தல்,நகர்ப்புற தேர்தலுக்காகவும் செலவளித்ததாகவும்,எந்த தருணத்திலும் கட்சி பணத்தில் செலவு செய்யவில்லையென்றும்,கட்சியின் தலைமை  பணம் தந்ததுமில்லை   கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைத்து வந்ததாகவும் தனது வளர்ச்சி பிடிக்காமல் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா தொல்லை கொடுத்து வந்தார் என்றும்  இதைதொடர்ந்து இதனை கட்சி தலைமைக்கு தெரியப்படுத்திய நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நேரிலும் பொது செயலாளரிடம் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றும்,தன்னிடம் தன்னிலை விளக்கம் கூட கேக்கவில்லையென்றும்,

அமமுக-வில் தென்மாவட்டத்தை பொறுத்தவரை டி.டி.வி தினகரனக்கு அதிகாரம் இல்லை, எனவும்
தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா தான் சர்வாதிகாரியாக செயல்படுவதாக தெரிவித்தார்.

கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்ட நிலையிலும்  தன்னுடைய ஆதரவாளர்களான அமமுக-வை சேர்ந்த இரண்டு பேரூராட்சி துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், கிளைக் கழகச் செயலர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரம்,கிராமங்களில் 1.50 இலட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும்,மருத்துவ முகாம்கள்,வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவைகளை நடத்தியது போன்று தொடர்ந்து நற்பணிகளை செய்ய உள்ளதாகவும்,இன்னும் 10 தினங்கள் கழித்து அடுத்தகட்டமாக என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து அறிவிக்க உள்ளதாகவும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

( நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் பொறுப்பு வகித்த அய்யாதுரை பாண்டியன் திமுக- வில் இருந்து விலகி அமமுக-வில் இணைந்து கடையநல்லூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)


 

அய்யாத்துரை பாண்டியன் நீக்கம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா.
 

Tags : Leading AIADMK executives in Tenkasi district resign due to dismissal of Ayyathurai Pandian.

Share via