இயக்குநர் வெங்கட் பிரபு தாயார் காலமானார்!!

இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (69). இவர் உடல் நலம் பாதிப்பு கடந்த சில நாட்களாக அவதியுற்று வந்தார். இந்நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு 11.30 மணிக்கு மணிமேகலை கங்கை அமரன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கங்கை அமரனின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
அனைவரிடமும் மிகவும் தன்மையாக பழகக்கூடிய மணிமேகலை, தனது பிள்ளைகள், கணவரின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர். அவரது மறைவால் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் பெரும் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
Tags :