சி.வி. சண்முகம், நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு

by Admin / 18-03-2026 08:01:57pm
 சி.வி. சண்முகம், நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய அறுபதாவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய பின்பு  நயனதாரா பற்றி நேற்று விழுப்புரம் அதிமுக கூட்டணி சார்பாக நடைபெற்ற திமுக ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி. சண்முகம், நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் ,அவரும் தான் திட்டமிட்டு பேச பேசவில்லை. வாய் தவறி பேசி விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்ட பின்பும் மகளிர் அமைப்பு, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் ,பாரதிய ஜனதா கட்சி சார்பாக குஷ்பு எனபலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண்ணைப் பற்றி எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை பற்றி தவறுதலாக பேசக்கூடாது என்றும் பெண்கள் தான் இன்று குடும்பத்தின் ஆணிவேராக இருக்கின்றார். பெண்ணை தெய்வமாக பார்க்கப்படுகின்ற இந்த நாட்டில் இது போன்ற பேச்சுக்கள் எந்த மட்டத்தில் இருந்தும் வரக்கூடாது என்றும் அது நடிகையாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் எந்த ஜாதியாக எந்த மதமாக எந்த கட்சியாக இருந்தாலும் பெண்களைப் பற்றி இனி இழிவாக பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற நிலை தொடர்ந்தால் தன் தலைமையிலே பெண் சக்தியை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று கோபமாக தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo