தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Editor / 16-11-2023 11:23:59pm
தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Share via