காஷ்மீர் நடைபயணத்தில் ராகுல் காந்தி.

by Admin / 22-01-2023 01:31:26pm
காஷ்மீர் நடைபயணத்தில் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த ஆண்டுசெப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியா குமரியிலிருந்து பாரதம் முழுவதுமான நடைபயணத்தை தொடங்கி இதுவரை 3,000க்குமேற்பட்ட தூரங்களைக் கடந்திருக்கிறார்.இது கிட்டதட்ட ஐந்து மாதங்களை நிறைவு செய்யும்நிலையை அடையும்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியனுக்குள் நுழைந்திருக்கிறார் .காங்கிரஸ் கட்சியின்  தலைவராகவும் எதிர்கால பிரதமர் ஆக வேண்டும் என்கிற  திட்டமும்  இல்லாமல் எழுச்சியுடன் அவர் பயணம் தொடர்கிறது.வரும் 2024 நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க வை கடுமையாக எதிர்க்க எடுக்கப்பட்ட உத்தி என்றுகூடசில அரசியல் நோக்கர்கள் கூறினாலும் பத்தாண்டுகள் வலுமையாக இருக்கும் ஆளும் கட்சியை அவ்வளவு எளிதாக இவருடைய பயணம் அசைத்துவிடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மீதான ஒரு புதிதான புரிதல் மக்களிடை யே தோன்றியுள்ளதை மறுப்பதற்கில்லை என்றும் சொல்கிறார். தம் உடையில் பழக்கவழக்கத்தில் இயல்பானவராகத் தோன்றியுள்ள ராகுல் மீது இளைஞர்களிடம் ஓர் ஈர்ப்பு உருவாகியுள்ளது.பெரிதான மாற்றத்தை அது தோற்றூவிக்காவிட்டாலும் சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் அது ஒரு மாற்றத்தை உருவாக்க அடித்தளமாகக்கூட மாறலாம் .ஜம்மு சந்த்வால் பகுதிநடைபயணத்தில் பங்கெடுத்த சிவசேனா(யுபிடி)தலைவர் சஞ்சய் ராவத் ,ராகுல் பிரதமராகும் தகுதியுடையவர் என்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க விற்கு கடும் சவாலாக அமைவார் என்றும் கூறியுள்ளது  அவ்வளவு சாதாரணமாக தள்ளிவிட்டு செல்லும் வாக்கியங்கள் அல்ல.தேசிய அளவில்பா.ஜ.கவிற்கு ஆம் ஆத்மி ஒருசில மாநிலங்களைத் தவிர..பெரிதான எதிர்ப்பு இல்லை. ஆனால் ,தொய்வுடன் இருக்கும் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஒருபலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகச்செயல்படுவதற்கு ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் பக்க பலமாக மாறலாம்.
 

 

Tags :

Share via