நம் மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்’ - முதல்வர்

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு சிறிய உதவி, தன்னம்பிக்கை போதும். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும். அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருப்பது உலகிற்கு தெரியவந்துள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடிக்கணினிகள் வழங்கினார்.
Tags :