.பிதாமகன் தயாரிப்பாளர் வி .ஏ. துரை காலமானார்.

by Admin / 03-10-2023 11:13:07am
.பிதாமகன் தயாரிப்பாளர் வி .ஏ. துரை காலமானார்.

தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார் .பிதாமகன் ,கஜேந்திரா படங்களை தயாரித்த இவர் ரஜினியின் பாபா படத்தின் தயாரிப்பு மேற்பார்வை பணியையும் செய்தவர். பிதாமகன் படத்தில் ஐந்து கோடிக்கு மேல் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது சொத்துக்களை எல்லாம் விற்று இப்பொழுது மருத்துவச் செலவுக்கு கூட பணம் இன்றி தவிப்பதாக பேட்டி அளித்திருந்தாா். சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக அவரது கால் அகற்றப்பட்டிருந்த நிலையில்திரைத் துறை பிரபலங்கள் அவருக்கு நிதி உதவி செய்து அவர் சிகிச்சைக்கு துணை நின்றனர். இந்நிலையில் .அவர் தம் வளசரவாக்கம் வீட்டில் நேற்று இரவு 9 மணி அளவில் காலமானார். அவரது மரணச் செய்தி கேட்ட பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு நேரிலும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via