பாஜக வேண்டாம் என்பது தொண்டர்கள் எடுத்த முடிவு

by Staff / 03-10-2023 11:11:53am
பாஜக வேண்டாம் என்பது தொண்டர்கள் எடுத்த முடிவு

பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சமீபத்தில் அறிவித்தது. இருப்பினும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ''பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதை பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு கிடையாது. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூடி எடுத்த முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo