காவிரி நீர் பிரச்சனை தமிழகத்திற்கு எந்த அளவிற்கு வாழ்வாதார பிரச்சனையோ,அதே அளவுக்கு தொகுதி மறு சீரமைப்பு விவகாரமும்

by Admin / 08-08-2026 08:48:38pm
காவிரி நீர் பிரச்சனை தமிழகத்திற்கு எந்த அளவிற்கு வாழ்வாதார பிரச்சனையோ,அதே அளவுக்கு தொகுதி மறு சீரமைப்பு விவகாரமும்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த எம் பி கூட்ட தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், காவிரி நீர் பிரச்சனை தமிழகத்திற்கு எந்த அளவிற்கு வாழ்வாதார பிரச்சனையாகவும் முக்கியமானதாக இருக்கிறதோ அதே அளவுக்கு தொகுதி மறு சீரமைப்பு விவகாரமும் தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய பிரச்சினையாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களில் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளதாகவும் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்பதால் இறைவன் முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் அதற்கான ஆலோசனை மிக அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo