தீப்பற்றி எரிந்த தனியார் ஜெட் விமானம்
புளோரிடாவின் நேபிள்ஸ் நகரில் தனியார் ஜெட் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் விமானம் தீப்பற்றி எரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
Tags :