நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

by Editor / 04-03-2023 09:20:56pm
நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்துப்பதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தமிழகம் கேரள எல்லை மற்றும் தமிழக ஆந்திர எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்மாவட்ட  பகுதிகளிலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டும், தீவிர கண்காணிப்பு செய்தும் வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் பொருளாய்வுத்துறை காவல் ஆய்வாளர் கலா மற்றும் போலீசார் மேலப்பாளையம்-மதுரை ரோடு குறிச்சி விலக்கில் தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்ட போது திருநெல்வேலி காரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் என்பவர் ரேஷன் அரிசி கடத்தி வந்த குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர், மணிகண்டன் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டு வந்ததால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் போட்டு திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்க துறை காவல் துறை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் மதுரை மண்டல கொடுமை பொருள் வழங்கல் குற்ற பொருளாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா பரிந்துரை பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி மணிகண்டன் மீது கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1980 இன் கீழ் திருநெல்வேலி மாநகர ஆணையர் ராஜேந்திரன் ஆணைப்படி மணிகண்டனை திருநெல்வேலி காவல் ஆய்வாளர்  பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்தார்.
 

 

Tags :

Share via