திண்டுக்கல் சிறையில் இருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி திடீர் மரணம்.

by Staff / 17-10-2025 10:14:10am
திண்டுக்கல் சிறையில் இருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி திடீர் மரணம்.

திண்டுக்கல்லில் கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர்செல்வம்(57), அஜித், வர்க்கீஸ்(42) ஆகிய 3 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வர்க்கீஸ் நீதிமன்ற பிணை பெற்று 13 வருடங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த வர்க்கீசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த வர்க்கீஸ்க்கு திடீர் உடல் நல கோளாறு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து சிறை காவலர்கள் வர்க்கீசை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேற்படி சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : திண்டுக்கல் சிறையில் இருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி திடீர் மரணம்

Share via