சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

by Editor / 09-08-2025 12:59:55pm
சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சவன் மாவட்டத்தில் உள்ள சாண்டில் அருகே இன்று (ஆகஸ்ட் 09) அதிகாலை சரக்கு ரயிலின் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக தென்கிழக்கு ரயில்வேயின் சாண்டில்-டாடாநகர் பிரிவுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via