தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லி
டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று டெல்லிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags :



















