திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எம்ஜிஆர் நகாில் ஆர்ப்பாட்டம்-.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை

by Admin / 17-03-2026 11:47:50am
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எம்ஜிஆர் நகாில் ஆர்ப்பாட்டம்-.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எம்ஜிஆர் நகாில் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்ததாக கூறி ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என்றும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தின. சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி தமிழ்நாட்டில் போதை பொருள் அதிகரித்துள்ளதாகவும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து இரண்டு வயது குழந்தையிலிருந்து கல்லூரி மாணவிகள் வரை இது தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் இதற்கு திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் டாஸ்மாக் கடையில் விற்கப்படுகின்ற மதுபான பாட்டில்களை திரும்ப அழைக்கும் பொழுது ஒரு பாட்டிற்கு பத்து ரூபாய் என்கிற கலவரத்தில் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை திமுகவினர் சம்பாதிப்பதாகவும் சிவகங்கை காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தமிழ்நாட்டில் மின்சார வரியில் இருந்து வீட்டு வரி கட்டட அனுமதி வரி தொழில் தொடங்குவதற்கான மாநகராட்சியின் வரி என்று எல்லாமே 3 மடங்காக உயர்த்தப்பட்டு மக்களை பாதிப்படைய செய்திருக்கிற அரசாக திமுக அரசு உள்ளது என்றும் இந்த வெடியா திமுக அரசை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி தமது உரையை முடித்தார் இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டன ஆர்ப்பாட்ட அறிக்கையை வாசித்தார். கட்சியினர் அதை திரும்பச் சொல்லி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் என் டி ஏ கூட்டணி ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கியது மதுரையில் நைனார் நாகேந்திரனும், கோவையில் அண்ணாமலையும் கடலூரில் அன்புமணி ராமதாஸ் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் தடை இன்றி கிடைப்பதாகவும் இது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகவும் போராட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எம்ஜிஆர் நகாில் ஆர்ப்பாட்டம்-.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை
 

Tags :

Share via