தனுஷ் படத்தில் 2 பிரபல நடிகைகள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் கேப்டன் மில்லர். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதில் டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்டத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக அதாவது மகளிர் மட்டும், சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், சுழல் உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதிதா சதிஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
Tags :