மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் காவலாளி பலி
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் ஆறுமுகத்துரை (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலையில் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றாராம். இவர் மடத்தூர் அணுகு சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்துரையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :




.jpg)













