கன்னியாகுமரியில்  விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா. 

by Editor / 16-07-2024 10:29:56am
கன்னியாகுமரியில்  விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா. 

 தமிழ்நாட்டில் முதன்முறையாக கன்னியாகுமரியில் இந்திய விண்வெளி துறையின் சார்பில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குழு சார்பில் ரூ.39.16 கோடி மதிப்பில் இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via