31- வது தென்பண்டல முதலமைச்சர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இன்று சென்னை கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் 31- வது தென்பண்டல முதலமைச்சர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். என் மாநாட்டின் துணைத் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். தென் மாநில முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி. கே ,சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். என் மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை மற்றும் நதிநீர் சிக்கல்கள் தீர்ப்பது மாநில பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துதல் தொழில் முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
Tags :


















