டெக்சாஸ் பகுதியில் பள்ளி அருகே பயங்கர ஆயுதங்களோடு சுற்றித்திரிந்த மாணவன் கைது

அமெரிக்காவில் டெக்சஸ் பகுதியில் பள்ளியில் 19 மாணவர்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயுதங்களுடன் ரிச்சர்ட்சன் உயர் நிலை பள்ளிக்கு அருகே ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒரு மாணவன் பள்ளிக்கு அருகில் நடமாடுவதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதியில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வேகமாக செயலில் இறங்கிய அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர் வாகனத்தில் ஏகே 47 ரக கைத்துப்பாக்கி மற்றும் ரைபிள் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்யப்பட்டுள்ளன்.
Tags :