திமுகவில் இணைகிறார் தோப்பு வெங்கடாசலம்

by Editor / 10-07-2021 01:17:45pm
திமுகவில் இணைகிறார் தோப்பு வெங்கடாசலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காமல், அவருக்கு பதிலாக ஜெயகுமார் என்பவரை களமிறங்கியது. இதன் காரணமாக தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நாளை முக்கிய நிர்வாகிகளுடன் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via

More stories