சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

by Staff / 04-06-2024 03:59:53pm
சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

ஆந்திர சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆந்திர சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு காருவுக்கும், அவருடைய தெலுங்கு தேசம் கட்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும். ஆந்திர மக்களின் நம்பிக்கைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via