கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

ஐரோப்பிய கவுன்சிலின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ உரிமைகளில் இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தற்காலிக நடவடிக்கைதான் என்றும் உறுப்பினராக ரஷ்யா தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா கண்டத்தின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பான இந்த கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன.இதில் கடந்த 1996-ம் ஆண்டுதான் ரஷ்யா இணைந்தது.
மாஸ்கோவுடனான தொடர்பை நிறுத்திக் கொள்வதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags :