நேற்றுஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் 250 மீட்டர் வேகத்தில் கெசானி சூறாவளி-இருபதுக்கு மேற்பட்டோர் இறந்தனர்.
கெசானி சூறாவளி இந்திய பெருங்கடல் தீவான- கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் 250 மீட்டர் வேகத்தில் காற்றானது வீசியதில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கெசானி என்னும் சக்தி வாய்ந்த வெப்ப மண்டல சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தோமாசினா கடுமையாக புயலால் பாதிப்புக்கு உள்ளானது. காற்றின் வேகமானது கரையை தொடும்போது 280 கிலோமீட்டர் வரை வீசியது. இந்தக் காற்றின் பாதிப்பால் இருபதுக்கு மேற்பட்டோர் இறந்தனர். 30 க்கு மேலானோா் காயமடைந்தனர். 15 பேர் காணாமல் போய் உள்ளனா். சுமார் 2,700 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனா்.டோ மாசினா நகரத்தின் 75% உள்கட்ட அமைப்புகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் இடிந்து விழுந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :


















