மகாராஷ்டிரா நகராட்சி - நகர் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 288 நகராட்சித் தலைவர் பதவிகளில் மகாயுதி கூட்டணி 27 இடங்களை கைப்பற்றியுள்ளது இதில் பாஜக 117 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது சிவசேனா 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது இதில் காங்கிரஸ் 28 இடங்களையும் உத்தம்தாக்கரைவின் சிவசேனா ஒன்பது இடங்களையும் சரத்து பவர் இன் தேசிவாத காங்கிரஸ் ஏழு இடங்களையும் பெற்றுள்ளது. இந்த வெற்றி வரும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 29 மாநகராட்சி தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்த வெற்றியை மக்களின் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags :



















