பிசியோதெரபிமாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்துகலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை -மருத்துவர் கைது
சென்னையில் பிசியோதெரபி நான்காம் ஆண்டு பயிலும் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்துகலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார்கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி பயின்று வரும் மாணவி பெரம்பூரில் பிசியோதெரப்பு மையத்தில் பயிற்சி(இன்டன் சிப் ) பெற்று வந்தார் .சனிக்கிழமை அன்றுநோயாளி வீட்டிற்கு சென்று பிசியோதெரபி அளிக்க வேண்டும் என்று கூறி மாணவியை அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் காரில் கொளத்தூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தம் குடும்பத்தாரிடம் நடந்ததை கூறி ...கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இதன் பேரில் கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tags :


















