கனமழை கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

by Editor / 15-10-2024 10:34:37am
கனமழை கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து கடலில் யாரும் இறங்காதவாறு போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : கனமழை எச்சரிக்கை காரணமாகசுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

Share via