தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது காய்கறிகள் விலை உயர்வு.

by Editor / 15-10-2024 09:40:15am
தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது காய்கறிகள் விலை உயர்வு.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கையை அடுத்துபல இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர்.தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது.தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, கிலோ கணக்கில் காய்கறிகளை மக்கள் இருப்பு வைக்க தொடங்கினர்.இதனால், தக்காளி, பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்தது.இதற்கிடையே, இன்று காய்கறிகள் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்துள்ளது. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

 

Tags : தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது காய்கறிகள் விலை உயர்வு.

Share via
Logo