தனது 3 வயது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கசாப்பு கடைக்காரர் தனது மூன்று வயது குழந்தையை கொடூரமாக படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிக்கு அடிமையான சாந்திகுமார் என்ற கசாப்பு கடைக்காரர், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மனைவியின் அருகில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தையை குமார் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இது குறித்து மனைவி போலீசில் புகார் அளிக்கவே வழக்கு பதிவு செய்து. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :