முதியவருக்கு. ஓடி வந்து உதவிய உதவி ஆய்வாளர்!

by Editor / 25-04-2021 04:14:03pm
முதியவருக்கு. ஓடி வந்து உதவிய உதவி ஆய்வாளர்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் இரவு ஊரடங்கு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது நாகல் நகர் ரவுண்டானா அருகில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் அழுது கொண்டிருப்பதை கண்டார் .இதைப்பார்த்த காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் முதியவரிடம் சென்று என்ன நடந்தது என்று விசாரித்த போது, தான் உணவு வாங்க காலதாமதம் ஆகிவிட்டது. அதற்குள் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு விட்டது.
 
அதனால் பசியால் நான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று கூறி கண்ணீர் சிந்தி உள்ளார். இதைக்கண்ட ஜான்சன் தான் சாப்பிட வைத்திருந்த உணவை முதியவருக்கு கொடுத்து சாப்பிட வைத்தார். அத்துடன் முதியவரின் அருகில் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்து வாஞ்சையுடன் அவர் நடந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட பலரும் காவலர் என்றால் இவரை போல கண்டிப்பும் , அன்பும் இருத்தல் வேண்டும் என்று பாராட்டி வருகின்றனர்.

Tags :

Share via