ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவுமே இல்லை: முதல்வர் ஸ்டாலின்

தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதுவும் இல்லை. அதனால் திரும்ப அரைத்த மாவையே எடப்பாடி பழனிசாமி அரைத்து கொண்டிருக்கிறார். எனது டெல்லி பயணம் குறித்து சொன்னதையே திரும்ப சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.
Tags :